கிறிஸ்துவை இருதயத்தில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளுங்கள்; அது மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும் (Just Get Christ in the Heart; It Will Take care of the Rest) “ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3:3) இதைக் குறித்து தேவனுடைய தீர்க்கதரிசி பிரன்ஹாம் கூறியுள்ளதை சற்று பாருங்கள்: கடந்த திங்களன்று என்னுடைய பிறந்த நாள் கடந்து சென்றது, எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆனது. நான் வந்து பிரன்ஹாம் குடும்பத்தில் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்று பிரன்ஹாம் குடும்பம் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு பிரன்ஹாமாகவே பிறந்தேன். அந்த விதமாகத்தான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் தானே நாம் ஒரு கிறிஸ்தவர்களாக பிறந்திருக்கிறோம், நாம் பிறப்பிலேயே கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் (யோவான் 13:1-8). அது நம்மை புது சிருஷ்டிகளாக ஆக்குகிறது (கலா 6:15-16). நம்முடைய பழைய சுபாவத்தைக்கொண்டு நாம் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. அதன் காரணமாகத்தான் இன்றைக்கு எல்லாவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கின்ற அநேகர் நம்மிடையே இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இரத்த வகையைக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனிலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்து வேறொன்றை அவனுக்குள்ளே செலுத்துவது போன்று, ஜீவனை வெளியே எடுக்கின்ற, உங்களை மாற்றுகின்ற ஒன்றாகிய அந்த மறுபடியும் பிறத்தலின் அனுபவத்தை அவர்கள் பெற்றதேயில்லை. அது என்னவென்றால் ஒரு மனிதனுடைய பழைய ஜீவனை வெளியே எடுத்துப் போட்டு கிறிஸ்துவினுடைய ஜீவனை விசுவாசிக்குள்ளாக செலுத்துவதேயாகும். அப்பொழுது அவன் ஒரு புது சிருஷ்டியாகின்றான். (2 கொரி. 5:17). அவன் ஒரு புது சிருஷ்டியாகின்றான். “எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கின்ற எங்கள் நிருபம் நீங்கள்தானே,'' (2 கொரி. 3:2) என்று வேதம் கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, அநேக மக்கள் வேதாகமத்தை படிப்பதேயில்லை. ஆனால் தேவன் உங்களை ஒரு ஜீவிக்கின்ற பிரதிநிதியாகச் செய்திருக்கின்றார். நீங்கள் நடமாடுகின்ற எழுத்தாயிருக்கிறீர்கள், கிறிஸ்து உங்களுக்குள்ளாக இருந்து, நீங்கள் நடமாடுகின்ற வேதாகமமாக இருக்க வேண்டும். நீங்கள் நடமாடுகின்ற தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கிறிஸ்தவனென்று கூறிக்கொண்டு அவ்வாறே இல்லாமல் உங்கள் செய்கைகளின் பாதிப்பினாலே அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவினின்று புறம்பே தள்ளினதினாலே நியாயத்தீர்ப்பின் நாளிலே அதற்காக பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். மனுஷன் மரிக்கவேண்டு மென்றும் அதற்குப் பிறகு நியாயத்தீர்ப்பென்றும் நாம் அறிந்திருக்கிறோம் (எபி. 9:27-28). மரணம் கடினமான ஒரு காரியமல்ல. ஆனால் மரணத்திற்குப் பிறகு வருகின்ற அந்த நியாயத்தீர்ப்பு: அதுதான் மோசமான ஒரு கட்டமாகும். அங்கே தான் நீங்கள் வாழ்க்கையில் செய்ததற்கெல்லாமும், உங்கள் செய்கைகளினால் மற்றவர்களின் மேல் நீங்கள் பிறப்பித்த வினைபயனின் பாதிப்புகளுக்காகவும் அந்த நாளிலே நீங்கள் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் (2 கொரி. 5:10-11). ஒரு மதபோதகத்தை நோக்கிப்பார்க்காமல், ஒரு ஸ்தாபனத்தை நோக்கிப்பார்க்காமல், அல்லது யாரோ ஒரு நபரை நோக்கிப் பார்க்காமல், பாரமான யாவற்றையும் நம்மை சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி. 12:1-3). வஞ்சிக்கப்படாதிருங்கள், நீங்கள் சற்று இதை ஆராய்ந்து பார்த்தால் நலமாயிருக்கும். பாருங்கள், நீங்கள் “சரி, இதை செய்வதனால் என்னை கடிந்து கொள்ள வேண்டாம், அதைச் செய்வதினால் என்னை அது கடிந்து கொள்வதில்லை'' என்று கூறிக்கொண்டேயிருப்பீர்களானால் என்ன, அது உலகத்தின் காரியங்கள் அல்லவா? இப்பொழுது, நான் உங்களுக்கு கூறுவது ஒரு சிறு மாத்திரையைப் போல சற்று கசப்பாயிருக்கும். சற்று உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படியான எண்ணத்தை நீங்கள் கொண்டிருப்பது எதைக் குறிக்கிறதென்றால் நீங்கள் கிறிஸ்துவினிடம் வரவேயில்லை என்றும் நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்பதற்கும் அது ஓர் நிச்சயமான அடையாளமாகும். ''உலகத்திலும் உலகத் திலுள்ளவைகளிலும் ஒருவன் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பில்லை'' (1 யோவான் 2:15-17) இப்பொழுது, அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்று நீங்கள் அறிந்திருப்பதனால் அக்காரியங்களைச் செய்வதை மற்றும் இந்த காரியங்களைச் செய்வதை நீங்கள் விட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் இன்னும் உள்ளே வருவதற்கு அருகாமையில் கூட இல்லாமல் எங்கோ இருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம் அதுவாகும். உங்களுக்குள்ளாக அந்த காரியமானது மரிக்கும் போது அதனுடைய சுபாவமனது வெளியே சென்று விடுகின்றது, அங்கே உள்ளே வேறொரு நபர் இருக்கின்றார், அது பிறப்பிப்பது என்னவென்றால்... உங்களுக்குள்ளாக இருக்கும் கிறிஸ்துவில் இருக்கும் அந்த பரிசுத்த ஆவி தாமே கிறிஸ்துவைப் போன்றே அமைந்திருக்கின்ற ஜீவியத்தை அது பிறப்பிக்கும். நீங்கள் எதுவுமே செய்ததில்லை; அவர் என்ன செய்தாரோ அது தான். அவர் அதை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொண்டார். எந்த ஒரு காரியமுமானாலும், எந்தவித ஒரு உணர்ச்சிவசப்படுதலையும் பரிசுத்த ஆவியின் இடத்தை எடுத்துக்கொள்ளும்படிக்குச் செய்யவேண்டாம். புதிய பிறப்பானது வரும் போது நீங்கள் மாற்றப்படுகிறீர்கள் (யோவான் 3:1-8). நீங்கள் அதை நிருபிக்க எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; உங்கள் வாழ்க்கை அதை நிருபிக்கும். நீங்கள் நடக்கையில், உங்கள் அன்பு, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், பொறுமை ஆகிய இவைகள்காணப்படும், அது தான் நீங்கள் (கலா. 5:22-23). இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பானது உங்களில் இருப்பதை முழு உலகமும் காணும். நாம் பெரிய காரியங்களுக்காக எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டாம். கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் வரத்தக்கதாக நாம் காத்திருப்போமாக. தாழ்மைக்காக நாம் காத்திருப்போமாக. பாருங்கள்? (ரோமர். 12:16). மேலும் நாம் செய்கின்ற ஒவ்வொன்றிலும் கிறிஸ்துவை பிரதிபலிக்க எப்போதுமே நாம் முயற்சிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.'' ( யோவான் 4:4) உங்களிலிருக்கின்ற அந்த பெரியது என்ன? அது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து ஆகும்; கிறிஸ்துவுக்குள் இருந்த தேவன் உங்களுக்குள் இருக்கின்றார். பரிசுத்த ஆவி என்பது வேறொரு வடிவில் கிறிஸ்து. அது சரியே. அப்படியானால் அவர் உங்களுக்குள் இருப்பாரானால், இனி ஜீவப்பது நீங்கள் அல்ல; அது அவர் உங்களுக்குள் ஜீவப்பதாகும் (கலா. 2:19-21). பாருங்கள்? அது உங்களுடைய எண்ணமும் மற்றும் இதைக் குறித்து என்ன நினைக்கின்றாயோ எனபதைக் குறித்தும் அல்ல; இதைக் குறித்து அவர் என்ன கூறியிருக்கின்றாரோ அது தான் காரியமாகும். பாருங்கள்? அப்படியானால் அவர் உங்களுக்குள் இருக்கிறார் என்றால் அவர் என்ன கூறியிருக்கின்றாரோ அதை அவர் நிச்சயமாக மறுதலிக்கவே மாட்டார். அவரால் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் தாம் கூறியுள்ளதை அவர் காத்துக்கொள்ளப்போகிறாரென்றால், அவர் யார் மூலமாய்த் தம்மைத் தாமே உறுதிப்படுத்திக்கொள்ளப்போகிறாரோ அந்த நபரைக் கண்டெடுக்க அவர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். அப்படியானால் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்துவதைக் குறித்தென்ன? பாருங்கள்? வியாதியைப் பார்க்கிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். பாருங்கள்? வியாதி என்பது ஒரு தடை, இடையூறு ஆகும், அது தேவனுடைய பிரமாணங்களைத் தடை செய்கின்ற ஒன்றாயிருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையின் உண்மையான திட்டத்திற்கு இடையூறு பண்ணுகின்ற அந்த பிசாசைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர், அவர் தான் சுகமளிக்கிறவர், சிருஷ்டிகர் ஆவார் (போதுரு 2:21-24). ஆகவே உங்களிலிருக்கிறவர் கிறிஸ்து. கிறிஸ்து உங்களுக்குள் இருப்பாரானால், கிறிஸ்து உங்களுக்குள் ஜீவிப்பாரென்றால், கிறிஸ்துவின் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அவர் அவ்விதமாகக் கூறியுள்ளார், பரிசுத்த யோவான் 14:12, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கின்ற கிரியைகளைத் தானும் செய்வான்.'' நீங்கள் கிறிஸ்துவில் இருந்தால் அல்லது கிறிஸ்து உங்களில் ஜீவிப்பாரானால்... அப்படியானால் கிறிஸ்து தான் வார்த்தையாவார். அது சரியா? வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்குத் தான் வரும். (ஆமோஸ் 3:7). பாருங்கள்? ஆகவே கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்வாரானால் கிறிஸ்துவின் கிரியைகள் உங்கள் மூலமாக செய்யப்படும், கிறிஸ்துவினுடைய ஜீவியம் உங்கள் மூலமாக ஜீவிக்கப்படும். அவர் செய்த கிரியைகள், அவர் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் எல்லாமும் உனக்குள்ளாக வாழும். ஆனால் இன்னுமாக நீங்கள் உங்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருபீர்களானால், அப்பொழுது உங்கள் சொந்த கிரியைகளைத் தான் நீங்கள் செய்வீர்கள் (எபி. 4:10-11). தேவனுடைய வாக்குத்தத்தைக் குறித்து உங்களுக்குள்ளே சந்தேகங்களையும் குழப்பங்களையும் கொண்டிருப்பீர்களானால் அப்பொழுது கீறிஸ்து உங்களுக்குள் இல்லை. கிறிஸ்து உங்களுக்குள் ஜீவிக்கின்றார் என்றால், அவர் தம்முடைய வார்த்தையை அடையாளம் கண்டு கொள்வார், அவர் தம்முடைய வாக்குத்தத்தை செய்வார். பாருங்கள்? அவர் செய்வார். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கையில் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை நாம் கொண்டிருக்கின்றோம் (எபே. 1:3) கிறிஸ்துவுக்கு வெளியே நாம் உணர்ச்சிவசப்படுதல்களைக் கொண்டிருக்கின்றோம். கிறிஸ்துவுக்குள் இருக்கையில் நாம் உறுதியான ஆசீர்வாதங்களை உடையவர்களாக இருக்கிறோம், பாவனையானவைகளை, வஞ்சகமானவைகளை, நடிப்புகளை நாம் கொண்டிருப்பது கிடையாது. ஆனால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக நீ கூறிக்கொண்டு, அவ்விதமாக நீ இல்லையென்றால், உன் பாவங்கள் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும். ஆனால் நீ கிறிஸ்து இயேசுவில் இருப்பாயானால், பரலோக சமாதானத்தை உனக்கு அளிப்பதாக அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார் (யோவான் 14:27), பரலோக ஆசீர்வாதங்கள், பரலோக ஆவி எல்லாம் உன்னுடையதே (1 கொரி. 3:21-23). நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எல்லாவற்றையும் உடையவர்களாக இருப்பீர்கள். ஆமென். இது எவ்வளவு அழகான ஒன்று. ஆகவே வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால் நீங்கள் வார்த்தையுடன் கூட அபிஷேகிக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறீர்கள். ''நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' (யோவான். 15:7), அது கிறிஸ்து உங்களில் இருந்து, இந்த காலத்திற்கான வார்த்தையை அபிஷேகித்தல் ஆகும், எந்தெந்த காலத்தில் வாழ்ந்தனரோ அந்தந்த காலத்திற்குரிய வார்த்தையை. சுவிசேஷத்திற்குரிய தகுதியான வாழ்க்கையை நீங்கள் வாழத்தக்கதான ஒரே வழி என்னவென்றால், அந்த சுவிசேஷத்தையே, அந்த சுவிசேஷத்தின் ஒவ்வொரு சிறு காரியத்தையையும் உங்களுக்குள்ளாக வர அனுமதித்து அவருடைய வாக்குத்தத்தங்களை அப்படியே திரும்ப பிரதிபலித்து, அவைகள் உறுதிப்படுத்தப் பட்டவைகள் என்று காண்பிக்கும்படிக்குச் செய்தலேயாகும். தேவன் உங்களுக்குள்ளாக ஜீவித்து இந்த நாளின் வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தும்படிக்குச் செய்யுங்கள். இயேசு யோவனிடம் கூறினது போல, இப்பொழுது இடங்கொடு, யோவானே, அது சரியே, ஏனென்றால் நாம் தான் இந்நாளிற்குரிய செய்தியாளர்களாவோம், இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.'' ஆகவே நாம் இந்நாளின் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், இயேசு கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்வோமாக (யோவான் 1:12-13). அவர் தான் அந்த வார்த்தையாவார். அதின் எந்த ஒன்றையும் மறுதலிக்காதீர்கள், “அது சத்தியம்'' என்று கூறுங்கள். அதை உங்கள் இருதயத்தில் வைத்து ஆவிக்குரிய கனி உங்கள் மேல் இருந்து வேதாகமத்தில் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தையையும் அவர் நிறைவேற்றுவதை கவனித்துப் பாருங்கள். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற விரும்புகிறார், என்னுடைய மற்றும் உங்களுடைய கைகள் தவிர அவரிடம் வேறெதுவும் இல்லை. என்னுடைய மற்றும் உங்களுடைய கண்கள் தவிர அவரிடம் வேறெதுவும் இல்லை. என்னுடைய மற்றும் உங்களுடைய நாவு தவிர அவரிடம் வேறெதுவும் இல்லை. நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள் யோவான் 15:1-5). அந்த கொடிகள் கனிகளைக் கொடுக்கும். திராட்சைச் செடி கொடிக்கு ஊக்கத்தையூட்டும். அது தான் சுவிசேஷத்திற்கு தகுதியான ஒரு வாழ்க்கையாகும். ஒவ்வொரு ஸ்தாபனமும் தன்னுடையதான ஜீவனைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த மூல திராட்சைச் செடியானது மற்றுமொரு கொடியை பிறப்பிக்குமானால், அது முதன் முதலாக பிறப்பித்தது போல திராட்சைப் பழங்களைப் பிறப்பிக்கும். அதே போன்று இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவனானது மற்றுமொரு விசுவாசிகளின் சரீரத்தை பிறப்பிக்குமானால் அது முதன்முதலாக பிறப்பித்த கனியையே அது கொண்டிருக்கும்; அவர்கள் அதற்கு பின்னால் ஒரு அப்போஸ்தலரின் நடபடிகள் புஸ்தகத்தையே எழுதுவர், ஏனெனில் அது அந்த அதே ஜீவனாகவே இருக்கும். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? அதனிடமிருந்து உங்களால் அகன்று செல்லவே முடியாது. அது பரிசுத்த ஆவியினால் தாமே உங்களுக்குள்ளாக செலுத்தப்பட்ட கிறிஸ்துவின் ஜீவனாகும். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, அவர்கள் உன்னதத்திலிருந்து வரும் ஆவியின் வல்லமையினால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் பிரசங்கிக்கவோ அல்லது வேறெந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம் என்று தடுத்தார். ''உன்னதத் - திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் நீங்கள் காத்திருங்கள்.'' (லூக்கா 24:42-49). பாருங்கள்? நீங்களல்லாமல் அது தேவன் என்றாகும் வரைக்கும் நீங்கள் புறப்பட்டு போகக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் பிரதிபலிப்பை உங்களில் மக்களால் காண முடியும். அப்பொழுது மக்கள் அதை விசுவாசிப்பார்கள், ஏனெனில் அது நீங்கள் அல்ல, அது அவர் தான் என்பதாக இருக்கும். எவர்களை எல்லாம் அவர் முன்னறிந்தாரோ அவர்களை அவர் அழைப்பார் (ரோமர். 8:30). அவர்கள் அதைக் காண்பார்கள். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன'' நாம் பெரிய ஜனக்கூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் பத்தாயிரம் பேர்களுக்கு பிரசங்கிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் பிரசங்கிக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. நாம் தேவனுடைய விளம்பரப் பலகையாகக் கூட இருக்கலாம் (1 கொரி. 3:1-3). வயது முதிர்ந்த மனிதரே, வயதான பெண்களே, உங்கள் ஜீவியம் அந்த வாலிபனின் சுவிசேஷ வாழ்க்கையின் துவக்கமாய் இருக்கும்படிக்குச் செய்து, அந்த வாலிப மனிதரை சுவிசேஷ களத்தில் சென்று கிறிஸ்துவிற்கென பத்தாயிரம் ஆத்துமாக்களை சம்பாதிக்கும் படிக்கும் செய்யும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதை அவன் கண்டான். நீங்கள் சுவிசேஷத்தினுடைய எளிய வல்லமையை கொண்டு கிறிஸ்துவை அவனுக்கு அளித்தீர்கள். ஆம், நமக்கு கிறிஸ்து தேவை என்று நான் எண்ணுகிறேன். ஆம் ஐயா, நாம் கிறிஸ்துவைக் காண்பதற்கான ஒரே வழி என்னவென்றால் அவர் நம் ஒவ்வொருவரிலும் பிரதிபலித்தலேயாகும். நான் உங்களில் கிறிஸ்துவைக் காண்கிறேன். நீங்கள் என்னில் அவரைக் காண்கிறீர்கள். அந்த விதமாகத் தான் நாம் கிறிஸ்துவைக் கவனித்துப் பார்க்கிறோம். இங்கே காணப்படுகின்ற இந்த பழைய ஓக் மரமானது தன்னுடைய இலைகளை குளிர் காலம் முழுவதும் அப்படியே பிடித்துக்கொண்டிருக்கின்றது. வசந்த காலம் வரும்போது அந்த பழைய இலைகளை நீங்கள் அதிலிருந்து பறித்துப் போட வேண்டிய அவசியமில்லை , அதற்குள்ளாக புதிய ஜீவனை வர மாத்திரம் விடுங்கள். அப்பொழுது அந்த பழைய இலைகளெல்லாம் கீழே விழுந்து விடும். இதுவும் அவ்விதமே உள்ளது. கிறிஸ்து உங்கள் இருதயத்திற்குள் வரும்படிக்குச் செய்யுங்கள்; மற்றவை எல்லாம் தானாக நடக்கும். அது சரி, கிறிஸ்துவை இருதயத்திற்குள் வரும்படிக்கு மாத்திரம் செய்யுங்கள்; அது மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும்!